முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தோழர் கிட்டப்பா மறைவு! நமது ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான  மானமிகு தோழர் கிட்டப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (2.9.2026) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். இயக்கச் செயல்பாடுகளில் குன்றாத ஆர்வம் காட்டியவர் சுயமரியாதை வீரர் தோழர் கிட்டப்பா அவர்கள்.

அவரது மகள் திருமதி குடியரசி சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற செயற்குழு உறுப்பினராகவும், தஞ்சை பெரியார் மணியம்மை  நிகர் நிலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவின் தலைவராகவும்  தொண்டாற்றி வருபவராவார்.

தோழர் கிட்டப்பா அவர்களது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது அன்பு மகள் குடியரசி  – அதியமான் இணையர், தாமரைச் செல்வி – ஜவகர் இணையர் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

 

சென்னை

2.09.2026

குறிப்பு: சென்னை ஓஎம்ஆர் சிறுசேரி, 1B-702, இம்பீரியல் டவர்ஸில் உள்ள இல்லத்தில் அவரது உடல் நாளை (3.9.2026) காலை 10.30 மணி வரை வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு உடற்கொடையாக வழங்கப்பட உள்ளது.

தொடர்புக்கு: 8925188862

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *