நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு தோழர் கிட்டப்பா அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (2.9.2026) மறைவுற்றார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறோம். இயக்கச் செயல்பாடுகளில் குன்றாத ஆர்வம் காட்டியவர் சுயமரியாதை வீரர் தோழர் கிட்டப்பா அவர்கள்.
அவரது மகள் திருமதி குடியரசி சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற செயற்குழு உறுப்பினராகவும், தஞ்சை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவின் தலைவராகவும் தொண்டாற்றி வருபவராவார்.
தோழர் கிட்டப்பா அவர்களது மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது அன்பு மகள் குடியரசி – அதியமான் இணையர், தாமரைச் செல்வி – ஜவகர் இணையர் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.09.2026
குறிப்பு: சென்னை ஓஎம்ஆர் சிறுசேரி, 1B-702, இம்பீரியல் டவர்ஸில் உள்ள இல்லத்தில் அவரது உடல் நாளை (3.9.2026) காலை 10.30 மணி வரை வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு உடற்கொடையாக வழங்கப்பட உள்ளது.
தொடர்புக்கு: 8925188862
