சென்னை, செப். 2- “300 திருக்குறள்களை ஒப்பிக்கும் அய்ந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருக்குறளை இளம் வயதிலேயே மனப்பாடம் செய்ய வேண்டும்” என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், “சிறீராம் இலக்கியக் கழகம்” நடத்திய திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.
