நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-அய் தாண்டியது

இணையவழி கையெழுத்து இயக்கம்

காத்மாண்டு, செப் 02-  நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-த்தைத் தாண்டி உள்ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு நேற்று 7-ஆவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 4,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் 583 பேர் வெளிநாட்டினர் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட பாலங்கள் உடைந்துள்ளன. அங்கு தற்காலிகப் பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசு கோரியுள்ளது. இந்தியப் பொறியாளர்கள் குழு நேபாளத்தில் முகாமிட்டு தற்காலிக பாலங்களை அமைத்து வருகிறது. மேலும் நேபாளத்தின் நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய சுமார் 900 தொழிலாளர்களை காணவில்லை.

இரு இந்தியக் குழுக்கள் நேபாளத்தில் முகாமிட்டு சுரங்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நேபாள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பெருவெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 11,800 பேரை பத்திரமாக மீட்டு உள்ளோம். 4,400-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மரபணுச் சோதனை மூலம் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்த பணிக்கு இந்தியா, சீனா, சிங்கப் பூர் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு

நேபாள வெள்ளத்தில் இருந்து 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நேற்று (செப். 1) அறி வித்தது. 151 பேர் சீனாவின் உதவியுடன் தாயகத்திற்குப் புறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *