திருமருகல், செப். 2- நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 30.08.2026 அன்று மாலை 5 மணிக்கு மருங்கூரில் நடைப் பெற்றது. கூட்டத்திற்கு கழக ஒன்றியத் தலைவர் இராச.முருகையன் தலைமையேற்று உரையாற்றினார்.
அனைவரையும் வரவேற்று மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஆர் அறிவு மணி உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு, மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் ப.காமராஜ், சு.இராஜ் மோகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். நாகை மாவட்டக் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர் மணி பாரதி அவர்கள் நன்றி கூறினார்.
கழக முன்னாள் நாகை மாவட்டத் தலைவர் அழகப் பன் துணைவியார் நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலியனின் தாயார் பிரணாம்பாள், நத்தம் மதியழகன், நத்தம் சிற்றரசரன், கொட்டாரகுடி இலட்சுமி அம்மாள் ஆகியோருக்கு இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் 149ஆவது பிறந்தநாள் விழாவை திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து கிளைக் கழகங்களிலும் மிக எழுச்சியோடு கொண்டாடுதல் அனைத்து கிளைக் கழகங்களிலும் விளம்பரப் பதாகைகள் வைத்து சுவர் விளம்பரம் செய்து கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி துணைக் கருவிகள் வழங்கி கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.
அனைத்து கழகத் தோழர் களும் கட்டாயமாக விடுதலை தந்தார் வாங்க வேண்டும் அந்தந்த கிளைக் கழகங்களிலும் பெருவாரியான விடுதலை சந்தாக்களை திரட்டும் பணிகள் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
திருமருகல் சந்தைப்பேட்டை யில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியாரின் பட ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தந்தை பெரியாரின் 149ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கிளைக் கழகங்களிலும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.. கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
