ஏ.விக்னேஷ் – உ.டயானா இமாகுலேட் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் (விழுப்புரம் – கொசப்பாளையம்)

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் மாவட்டம் வீரசோழபுரம் சி.ஏழுமலை – மகாலட்சுமி ஆகியோரின் மகன் ஏ.விக்னேஷ், விழுப்புரம் மாவட்டம் ஓதியத்தூர் எம்.எம்.உத்திரைய நாதன் – ஜான் டார்க் மேரி (எ) ஆகியோரின் அன்பு மகள் உ.டயானா இமாகுலேட் ஆகியோரின் இணையேற்பு விழாவை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொசப்பாளையம் நிலா அறக்கட்டளை கல்வி வளாகத்தில் நடத்தி வைத்தார். உடன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், விழுப்புரம் தி.மு.க.தெற்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபண்ணா, மாவட்டச் செயலாளர் அரங்க பரணிதரன், விழுப்புரம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, திருவண்ணாமலை மாவட்டக் காப்பாளர் வேட்டவலம் பட்டாபிராமன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் இளம்பரிதி, திண்டிவனம் மாவட்டக் காப்பாளர் பரந்தாமன், திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் நாகை மு.இளமாறன், தி.மு.க. பொறுப்பாளர்கள் ஜெயசந்திரன் ஜனகராஜ், சக்கரை, கல்பட்டு ராஜா, கலைச்செல்வி, வீரராகவன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
(30-8-2026, கொசப்பாளையம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *