அரசுப் பணியாளர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதிகளில் திருத்தம் : அரசாணை வெளியீடு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 31-  தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் வெளியிட்டுள்ள அரசு பணியாளர்களுக்கான மாதாந்திர இடைக்கால உதவித்தொகை விதி களில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 1.1.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு பணிநிறைவு பெற்றவர்கள், பணியின்போது இறந் தவர்கள் மற்றும் பணிநிறைவுக்குப் பின் இறந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சி.பி.எஸ்.) உள்ள தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர இடைக்கால உதவித் தொகை மற்றும் குடும்ப உதவித் தொகை வழங்கும் அரசாணை கடந்த 16.6.2026 அன்று நிதித் துறையால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது அதிகமோ, அத்தொகையுடன் 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணமும் வழங்கப்பட்டது.

6-ஆவது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெற்று ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 1.1.2026 முதல் அகவிலைப்படி விகிதம் 262 சதவீதம் என்பதால், இவ்விதிகளில் திருத்தம் செய்து தற்போது புதிய அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், 6-ஆவது ஊதியக்குழுவின் கீழ் கடைசியாக ஊதியம் பெற்று, 30 சதவீத அடிப் படை ஊதியம் ரூ.10 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமாக இருந்து, 7-ஆவது ஊதியக்குழுவிற்கு மாற்றப்படாத ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் 262 சதவீத விகிதத்தில் வழங்கப்படும்.

6-ஆவது ஊதியக்குழுவின் கீழ் 30 சதவீத அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்தால், இடைக்காலத்தில் குறைந்தபட்சத் தொகை ரூ.10 ஆயிர மாக உயர்த்தப்பட்டு 60 சதவீதம் அகவிலைப்படி நிவாரணம் வழங்கப்படும். ஆனால், 7-ஆவது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே அகவிலைப்படி நிவாரணமாக கணக்கிடப்படும். இதனடிப்படையில் கருவூலக்கணக்கு ஆணையர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட் டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *