ஒன்றிய பிஜேபி அரசின் முட்டுக்கட்டை பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்றும் அய்ந்து மாதங்கள் கடந்தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 13- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு 5 மாதங்களை கடந்தும் இதுவரை முதல் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இத்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்பு திட்டம் நிறைவடைந்து, விமானநிலையம் – விம்கோநகர் வரையும், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வரையும் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில் நாள்தோறும் 3 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4ஆவது வழித்தடம் ஒன்றாகும்.

இத்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது.

9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங் களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இதற்கிடையில், 4ஆவது தடத்தில் ஒருபகுதியாக, பூந்தமல்லி – வடபழனி வரை 14.6 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் வழித்தடம் கடந்த பிப்ரவரியில் அமைக்கப்பட்டது.

இத்தடத்தில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரின் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு, இத்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்க கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன்பிறகு, மார்ச்சில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, தாமதமானது. தேர்தல் முடிந்து, தவெக அரசு ஆட்சிக்கு வந்து 5 மாதங்களை கடந்தும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இதற்கிடையில், தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், இரண்டு வாரங்களுக்கு முன்பு, இத்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரிலும் இந்த மெட்ரோ ரயில் சேவை மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. இத்தடத்தில், விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, “இத்தடத்தில் ரயில் சேவை தொடங்குவது தொடர்பாக நாங்கள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளோம். இதற்கான அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு அவர்கள் நேரம் ஒதுக்கி கொடுத்தபிறகு, ரயில் சேவை தொடங்கும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *