நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம்: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமா?

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 30 விரைவில் கூட்டப்படவுள்ள நாடாளுமன்ற சிறப்புத் தொடரில், நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள ‘தொகுதி மறுவரையறை மசோ தாவை’ மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதேவேளையில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநி லங்களில் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஏற்கெனவே இந்த மசோதாவிற்கு தமிழ்நாடு மேனாள்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநிலத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். மக்கள் தொகையைக் கட்டுப் படுத்திய மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக் கூடாது என்றும், தற்போதைய தொகுதி எண்ணிக்கையிலேயே விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரவிருக்கும் சிறப்புத் தொடரிலேயே இந்த மசோதாவைத் தாக்கல் செய்து நிறை வேற்ற அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படு வதால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பை யும் காரசாரமான விவாதங்களையும் எதிர்பார்க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *