கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.8.2026

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*  தி.மு.க. அமைப்பை சீரமைக்கும் முயற்சியில் 110 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.

*    சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடப் போவதில்லை: பெங்குயின் அறிவிப்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    ‘என்னை அமைச்சரவையிலிருந்து நீக்க சதி’: பாஜக சகாக்கள் மீது ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு. சுந்தர்கர் தொகுதி எம்.பி.யான ஓரம், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறியவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*    சோனியா காந்தியின் நினைவுக் குறிப்பிலிருந்து மோடி, ஆர்.எஸ்.எஸ்., சீனா குறித்த பகுதிகளை நீக்க பதிப்பாளர் முயன்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

தி இந்து:

*    தோல்வி (பெயில்) வார்த்தை நீக்கம்: பீகார் மாநிலத்தில் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் ‘தோல்வி’ என்பதற்குப் பதிலாக ‘திறன் பயிற்சிக்குத் தகுதியானவர்’ என மாற்றம். அடுத்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்; எதிர்பார்த்த மதிப்பெண் பெறாதது மாணவரின் திறமையை குறைக்காது என கல்வி அமைச்சர் மிதிலேஷ் தெரிவித்தார்.

*    இதர பிற்படுத்தப்பட்ட கிரீமிலேயர் வருமான வரம்பு விவகாரம் அமைச்சகங்களுக்கு இடையே முடங்கியுள்ளது: நாடாளுமன்றக் குழுத் தலைவர் தகவல். வருமான/செல்வ வரம்பு மற்றும் பதவிகளின் சமநிலை ஆகிய இரு அம்சங்களிலும் கொள்கை முடிவு எடுக்கப்படாமல், பணியாளர் அமைச்சகமும் சமூக நீதி அமைச்சகமும் இடையே விவகாரம் நீடிப்பதாக கணேஷ் சிங், எம்.பி. தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

*    இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களை ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா சந்தித்தது குறித்து குழப்பம்; இடஒதுக்கீடு கோரிக்கைகள் குறித்து மவுனம். நட்டா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்த நிலையில், சமூக ஊடகப் பிரசாரம் பொருளாதார அளவுகோலை அடிப்படையாகக் கொண்ட இடஒதுக்கீட்டை வலியுறுத்துகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*   அரசுப் பள்ளிகளை சீரமைக்காமல் போட்டித் தேர்வுகளுக்கு இலவச இணைய பயிற்சியா.!! பிரதமருக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி… இது பொறுப்பு ஏற்பதில் இருந்து தப்பிப்பதற்கான ஒன்றிய அரசின் ஒரு தந்திரம் என்று சாடல். நாடாளுமன்றக் குழு அறிக்கையில், தற்போதைய இலவச பயிற்சி திட்டம் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை இலக்கில் 26% மட்டுமே எட்டியதாக குறிப்பிடப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *