பாட்னா, ஆக. 29– பீகாரில் 10, 12ஆம் வகுப்புகளில் இனி தோல்வி (ஃபெயில்) கிடையாது என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் மார்க் ஷீட்டில் இனி ‘தோல்வி’ என்று குறிப்பிடப்படாது. அதற்கு பதிலாக ‘திறன் பயிற்சிக்குத் தகுதியானவர்’ என்று குறிப்பிடப்படும்.
தேர்வில் பெறும் மார்க் என்பது மாணவர்களின் திறமையின் அளவீடு அல்ல என்பதை உணர்த் தவே இந்த முடிவாம்.
இதன்மூலம் மாணவர் களின் தன்னம்பிக்கை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
