சென்னை, ஆக. 29– எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் (28.8.2026) கூறியிருப்ப தாவது:
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் இன்று (28.8.2026).
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களை தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், திமுக தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்.
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த திமுக தலைவர் தலை மையில் அணி திரள் வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு பதிவில், “அமெரிக்காவில் நடந்த போட்டியில் (GrandChessTour) சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற புதிய வரலாறு படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு எனது பாராட்டுகள்.
உலகின் முன்னணி வீரர்களை எதிர்கொண்டு, தனது அபாரமான திறமை மற்றும் தன்னம்பிக் கையால் இந்த வெற்றியை அவர் பெற்றிருப்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை. தம்பி பிரக்ஞானந்தா மென்மேலும் பல உலக சாதனைகளைப் படைக்க என் அன்பும், வாழ்த்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
