‘சாஸ்திரத்தின்படி மகளை வைப்பாட்டியாக்கிக் கொண்டேன்’ சட்டம் பேசிய பார்ப்பனனுக்கு நேர்ந்த கதி!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

முகலாயர்கள் நாட்குறிப்பை எழுதுவதை சட்டமாகவே ஆக்கி வைத்திருந்தனர். இன்று காவல்நிலையங்களில் புகார் முதல் அனைத்து நடவடிக்கைகளும் டைரியில் எழுதும் முறைகூட முகலாயர்களின் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம்தான் இன்றும் தொடர்கிறது.

அக்பர் காலத்தில் அவரது அரசவை நடவடிக்கைகள், அவருடைய அன்றாடப் பயணம், அங்கு நடப்பவைகள் எழுத்தாக பட்டுத்துணி, தோல் மற்றும் தாமிரத் தகடுகளில் எழுதப்படும்.

அக்பர் காலத்தில் அக்பர் நாமா (அரசவைக் குறிப்புகள்) – வாழ்க்கையில் அவர் சந்தித்தவைகள், வழக்குகள், தண்டனைகள் தொடர்பான பதிவுகள் தொடர்ச்சியாக சான்றுகளோடு பதிவாகி உள்ளன.

இது பாரசீகம், ஹிந்துஸ்தானி மற்றும் அன்றைய வட்டார பேச்சு வழக்கில் எழுதப்பட்டது, எழுத்துருக்கள் அரபி மற்றும் பார்ஸி எழுத்துக்களில் உள்ளன.

இந்த நூல்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருது மற்றும் ஆங்கிலம் பிறகு ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மும்பை ஆசியாடிக் சொசைட்டி, ஆசியாடின் சொசைட்டி வங்கம் (டாக்கா மற்றும் கொல்கத்தா), பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (லண்டன்) மற்றும் இலங்கையிலும் சில பிரதிகள் உள்ளன.

அப்துல் காதிர் பதவுனி (கி.பி.1540 முதல் 1615) (Abdul Qadir Badauni / Al-Badaoni) எழுதிய முந்தகப்-உத்-தவாரீக் (Muntakhab-ut-Tawarikh) என்ற நூலிலிருந்து – மிகவும் அருவருப்பான ஒரு பழக்க வழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயரிய கலாச்சாரம், ஹிந்துப் பாரம்பரியம் என்று எல்லாம் பேசும் பார்ப்பனச் சமூகத்தில் இருந்த ஒரு வழக்கத்தின் ஒரு மோசமானப் பதிவு.

கட்டுரை, ஞாயிறு மலர்

மகளை 4 வயதில் திருமணம் செய்துகொடுத்து – 17 வயதில் அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு அப்பெண்ணின் தந்தையே சாஸ்திர விதிகளைக் கூறி அப்பெண்ணைத் தனது வைப்பாட்டியாக வைத்துக்கொண்ட நிகழ்வை கேள்விப்பட்ட அக்பர் கடுமையாக கோபம் கொண்டு அந்தப்பார்ப்பனரைக் கொலை செய்த நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்பர் கங்கை ஆற்றைக் கடந்து இன்றைய பீகார், மேற்கு வங்க எல்லைப் பகுதியில் தங்கி இருந்த போது சகோர் என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பனர் தன் சொந்த மகளையே வைப்பாட்டியாக வைத்து அதன் மூலம் ஒரு மகனைப் பெற்றார். இந்தக் குற்றத்திற்காக சிறைவைக்கப்பட்டார். பின்னர் ஊர் தலைவர் முன்பு வாதாடி இது சாஸ்திரவிதிப்படி சரியானது என்று கூறி குடுமியை வெட்டி விட்டு ஊரை விட்டுச் செல்வதாக உள்ளது.

அக்பர் வங்காளத்திற்குச் செல்லும் வழியில் சகோர் வழியாகச் சென்றபோது, இந்த விவகாரம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அந்தப் பார்ப்பனரை கைதுசெய்து அழைத்துவரக் கூறினார்.

தனது மகளையே வைப்பாட்டியாக்கி அவர் மூலம் குழந்தையைப் பெற்றதும், அதற்கு சாஸ்திரத்தை காரணமாகக் கூறியதைக் கேட்டதும் அக்பரின் மனம் ஏற்கவில்லை.

தன்னை அழைக்க வந்த வீரர்களிடம் அந்தப் பார்ப்பனர் இவ்வாறு கூறுகிறார்:

“தன்னை விட்டுவிட்டால், தான் இஸ்லாமிற்கு மாறி விடுவேன்” என அக்பரிடம் கூறுங்கள் என்றான்.  இது அக்பரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அக்பர் கோபமுற்று, “இப்படி ஒரு மனிதர் உலகில் வாழவே தகுதியற்றவர்” என்று கூறி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கான சட்ட வல்லுநர்களையும் இமாம்களையும் அழைத்து விவாதித்தார்.

இஸ்லாத்தின் அனைத்து இமாம்களின் ஒருமித்த கருத்தின்படி இத்தகைய குற்றம் மரண தண்டனைக்குரியது என்று சமர்ப்பித்தார். இஸ்லாம் அல்லாத சட்ட வல்லுநர்கள் “அவனை மரண தண்டனைக்கு உட்படுத்தக் கூடாது, அவன் ‘பிராமணன்’ ஆகையால் அவனைக் கொலை செய்தால் பெரும் பாவம் பிடிக்கும்” என்றார்கள். ஆனால் அக்பர் இமாம்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.

“தனது மகளை வைப்பாட்டியாக்கி பிள்ளைப் பெற்றுக்கொண்ட ஒருவனைக் கொலை செய்தால் பாவம் பிடிக்கும் என்பது முட்டாள்களில் எழுத்து” என்று கூறிய அவர் அவனை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்ட கித்மத் ராய்(உள்ளூர் தலைவர்) – இருவரையும் சேர்த்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்த நாள், பேரரசர் அவனது கண்களுக்கு முன்பாகவே அவன்  ஆண்குறியை வெட்டி, வறுத்து அவனுக்கே உணவாக்க  உத்தரவிட்டார்.

அந்தப் பார்ப்பனனோ ‘தண்டனைக்குப் பிறகு தான் விடுவிக்கப் படுவோம்’ என்ற நம்பிக்கையில் தனது ஆண்குறியைத் தின்றான். அடுத்த நாள் பொதுவெளியில் அவனது தலையை வெட்ட உத்தரவிட்டார்.  பார்ப்பனரின் 17 வயது மகளையும், பிறந்த குழந்தையையும் பராமரிக்க உள்ளூர் கித்வாய்க்கு உத்தரவிட்டார்

ஆங்கில  மொழிபெயர்ப்பு:
W.H.Lowe (Asiatic Society of Bengal)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *