மணவிலக்கு ஒப்பந்தத்தில் கைவிடப்பட்ட நிதி உரிமைகளை மீண்டும் கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக. 28– ‘மணவிலக்கின் போது, வாழ்வூதியம் உள்ளிட்ட நிதி உரிமைகள் வேண்டாம் என்று ஒப்பந்தத்தில் மனைவி கையெழுத்திட்ட பின் பிற்காலத்தில் அதை மீண்டும் கோர முடியாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இணையர், 2016இல் இணைந்த சம்மதத்துடன் மணவிலக்குப் பெற முடிவு செய்தனர். அந்த ஒப்பந்தத்தில், மனைவி தாமாக முன்வந்து வாழ்வூதியம் உள்ளிட்ட அனைத்து விதமான பணப் பலன்களையும் கைவிடுவதாகவும், எதிர்காலத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் எந்தவித நிதியுதவியும் கோர மாட்டோம் என்றும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

இதன் அடிப்படையில் 2017இல், நீதிமன்றம் அவர்களுக்கு மணவிலக்கு வழங்கியது. சில ஆண்டுகளுக்கு பின், மணவிலக்குப் பெற்ற மனைவியும், அவரது மகளும் கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், பராமரிப்பு செலவு மற்றும் நிதிப் பலன்களை தரும்படி கோரினர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கணவர் தரப்பு கேரள உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், கணவரின் மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், விசாரணைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கணவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து அளித்த தீர்ப்பு:

சமரச ஒப்பந்தத்தின் போது மனைவி தாமாகவே முன்வந்து வாழ்வூதியம் உள்ளிட்ட நிதி உரிமைகளை கைவிட்டுள்ளார். மேலும், அந்த சமரச ஒப்பந்தத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி அவர் தனியாக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மணவிலக்கு பெற்ற பின் மீண்டும் குடும்ப வன்முறை சட்டத்தை பயன்படுத்தி அதே நிதி பலன்களை கோர முடியாது.

இருப்பினும், இணையரிடையே நடந்த சமரச ஒப்பந்தத்தில் மகள் ஒரு தரப்பினராக கையெழுத்திடவில்லை. எனவே, மகள் தனக்கான பராமரிப்பு செலவு மற்றும் நிதி பலன்களை கோரி தனியாக வழக்கு தொடர முழு உரிமை உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *