இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கிரீமிலேயர் பற்றிய வழக்கு வரும் முதல் தேதி அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, ஆக.27 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின் (ஓபிசி) கிரீமிலேயா் அளவுகோல் தொடா் பான ஒன்றிய அரசின் மனுவை உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.

ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் பணி யாற்றுவோரின் பிள்ளை களை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொள்ள முடியாது என்று கடந்த மார்ச்
11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அத்துடன் ஓபிசி வகுப்பினரில் க்ரீமிலேயா் வரம்புக்குள் (இந்த வரம்புக்குள் வருவோர் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற இயலாது) வருவோரை அடையாளம் காண்பது தொடா்பான 1993-ஆம் ஆண்டின் செப். 8-ஆம் தேதியிட்ட அலுவலக குறிப்பிணையை, 2004-ஆம் ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதியிட்ட விளக்கக் கடிதம் மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வு முடி வுகள் வெளியாகி, 5 நாள்கள் கழித்து இந்தத் தீா்ப்பளிக்கப்பட்டது.

1993-ஆம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணை யில் ஒருவா் கிரீமிலேயா் வரம்புக்குள் வருவாரா, மாட்டாரா என்பதை தீா்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வருவாயில், ஊதியம் மற்றும் விவசாய வழிகளில் ஈட்டப்படும் வருமானம் சோ்க்கப்படவில்லை. ஆனால், 2004-ஆம் ஆண்டின் விளக்கக் கடிதத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றுவோரின் ஊதிய வருவாயும் கிரீமிலேயரை தீா்மானிப்ப தற்கான அளவுகோலாக இருக்கும் என்று தெரி விக்கப்பட்டது.

2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வுக்குப் பொருந்துமா?

இந்நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பு 2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணிகள் தோ்வுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கம் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பணியாளா் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணித் தோ்வுக்கான தோ்வு நடைமுறை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. அந்தத் தோ்வுக்கு மார்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அந்தத் தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தினால், உயா் கல்வி நிறுவனங்களில் முடிவடைந்த மாணவா் சோ்க்கைகள், ஏற்கெனவே அளிக்கப்பட்ட பட்டப் படிப்பு பட்டங்கள் உள் ளிட்டவை பாதிக்கப்பட லாம். அத்துடன் அது தோ்வா்கள் இடையே பாகுபாட்டை ஏற்படுத்தக் கூடும்.

தற்போதைய கட்டத்தில் வகுப்புவாரி தகுதிப் பட்டியலை மீண்டும் பரி சீலனைக்கு உட்படுத்தினால், அது பயிற்சி அட்டவணைகள், பணிப் பிரிவு ஒதுக்கீடு, ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட வற்றிலும் அடுத் தடுத்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

எனவே, 2025-ஆம் ஆண்டில் குடிமைப் பணிகள் தோ்வு எழுதி வெற்றி பெற்ற 958 தோ்வா்களுக்கு ஒன்றிய அரசுப் பணியாளா் தோ்வாணையம் பரிந் துரைத்தபடி பணி ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையை அரசு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து விசாரிக்க சிறப்பு நீதி பதிகள் அமா்வு அமைக் கப்படும் என்று உச்சநீதிமன்றம் 25.8.2026 அன்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமா்வு செப். 1-ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த நீதி பதிகள் அமா்வு தான் மார்ச் 11-ஆம் தீா்ப்பை வழங்கியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *