கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.8.2026

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* விலைவாசி உயர்வு: உணவுப் பணவீக்கம் 5.52% ஆகவும், மொத்த விற்பனை பணவீக்கம் 9.78% ஆகவும் உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடுமையாக விமர்சனம்.

* ஓபிசி வழக்கு – உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு: ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான ஒன்றிய அரசின் மனுவை செப்டம்பர் 1-ஆம் தேதி உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஹிஜாப் விவகாரம்: உடை அணிவது தனிநபர் விருப்பம்; அதில் தலையிடக் கூடாது என ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் அத்தியாவசிய அம்சமல்ல என ஆகஸ்ட் 21-ஆம் தேதி உயர்நீதிமன்றம் கருத்துக்கு பதிலடி.

தி இந்து:

* உத்தரப் பிரதேசம்: 2027இல் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உதவித்திட்டங்கள் வழங்குவதுடன், மூடப்பட்ட 26,000 பள்ளிகளையும் மீண்டும் திறப்போம் என சமாஜ்வாதி கட்சி உறுதியளித்துள்ளது. பெண்களுக்கு உண்மையான அரசியல் பிரதிநிதித்துவமும் மரியாதையும் வளமும் வழங்குவதே தங்கள் “ஆதி அபாதி” (மக்கள் தொகையில் பாதி – பெண்கள்) கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் டிம்பிள் தெரிவித்தார்.

* இலவச பயிற்சித் திட்டம்: போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி திட்டத்தில் 10,500 மாணவர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 2,790 பேர் மட்டுமே (26%) சேர்க்கப்பட்டுள்ளனர். 2026–2027ஆம் ஆண்டிற்கான இலக்கு 7,000 பயனாளிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

* ஓபிசி கிரீமிலேயர்: ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் கோரியதற்கு ஓபிசி அமைப்புகள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, இது அரசின் காலதாமத உத்தி எனக் கண்டித்து, 958 யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் இன்னும் பணி ஒதுக்கீட்டுக்காக காத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அரசியலமைப்பு குறித்து ஓவைசி: அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக எதிர்த்ததாகவும், அதற்குப் பதிலாக மனுஸ்மிருதியை ஆதரித்ததாகவும் ஓவைசி குற்றச்சாட்டு.  1949 நவம்பர் 26-ல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே ஆர்.எஸ்.எஸ்-ன் ஊடகம் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்தார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *