நேபாள வெள்ளம் உயிரிழந்தோருக்குக் கழகத் தலைவர் இரங்கல் தமிழர்களை மீட்கத் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

இமயமலையில் நிகழ்ந்த திடீர் பனிச் சரிவின் காரணமாக நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டே கோஷி ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மனிதர்களும், வீடுகளும், கட்டடங்களும், பாலங்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகளைக் கண்ட எவருக்கும் கண்ணீர் வராமலிருக்க முடியாது. இப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இது வரை 160 என மதிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ 800-க்கும் மேல் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற கவலை எல்லாப் புறமும் சூழ்ந்துள்ளது.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது. தஞ்சையிலிருந்து சென்ற வர்களின் இதுவரை விவரம் கிடைத்துள்ள 20 பேர் தவிர, எஞ்சியவர்களின் நிலையும் கேள்விக் குறியாகி உள்ளது. சுற்றுலா சென்று ஆபத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத் துயரில் உயிரிழந்தோர் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது இரங்கலையும், அவர்களை இழந்துள்ள குடும்பத்தினருக்கு ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை      

27.08.2026    

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *