புதுடில்லி, ஆக.26 தமிழ் நாட்டுக்கு அடுத்த 15 நாள் களுக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட கருநாடகத்துக்கு உத்தர விடப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்குக் காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட டில்லியில் நடை பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கருநாடகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருநாடகம், தமிழ்நாடு, புதுவை, கேரளம் ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணை யமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு அமைப்பு களும் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அனைவருக்கும் பல னளிக்கும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. அந்தவகையில் காவிரி மேலாண்மை ஆணை யத்தின் 54-ஆவது கூட்டம் டில்லியில் ேநற்று முன்தினம் (24.8.2026) நடைபெற்றது.
இதில் 4 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். கருநாடக அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்படுவது குறித்து தமிழ்நாடு அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சுட்டிக்காட்டினர். பிறகு, தண்ணீர் இருப்பு மற்றும் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து கருநாடக அதிகாரிகள் ஆணையத்திடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இக் கூட்டத்தின் முடிவில், தமிழ் நாட்டுக்கு அடுத்த 15 நாள் களுக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாட காவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்குத் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டுக்கு 11.66 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
