மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வசமானது ஆட்சி கொல்கத்தாவில் இறைச்சிக் கடைகள் புல்டோசர் மூலம் இடித்துத் தரை மட்டம் திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்!

கொல்கத்தா, மே 7 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 207 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதன் மூலம் அங்கு மம்தா தலைமையிலான 15 ஆண்டு கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

வன்முறை

அதேசமயம், தேர்தல் முடிவு களுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் வெற்றி கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக, கொல் கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் அப்பட்டமான அராஜகம் அரங்கேறியுள்ளது. பாஜக ஆதரவாளர்கள் கும்பல் அங்குள்ள இறைச்சி கடைகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். மேலும், அங்குள்ள திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தையும் அவர்கள் சேதப்படுத்தினர். “தேர்தலுக்கு முன் ‘நம்பிக்கை’ பற்றிப் பேசியவர்கள், தற்போது ‘பயங்கரவாதத்தை’ வழங்கி வருகிறார்கள். மாற்றமானது புல்டோசருடன் வந்துள்ளது,” எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது அங்கு மத்திய படைகள் இருந்த போதிலும், அவர்கள் தலையிடாமல் வேடிக்கை பார்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது.

டெரிக் ஓ பிரையன் ஆவேசம்

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒளிப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,

“இதுதான் பாஜகவின் உண்மை முகம். இந்த வன்முறை ஒளிப்படங் களை உலகம் பார்க்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *