டேக்வாண்டோ களத்தில் முத்திரை பதித்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, ஆக. 22- திருச்சிராப் பள்ளி மாவட்ட டேக்வாண்டோ கியூரோகி சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் திருச்சி புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

ராக்கிட்டி டேக்வாண்டோ கழகம் மற்றும் மாவட்ட டேக் வாண்டோ சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மாணவி பி. ஆர். மோகிதா, மிக இளையோர் பிரிவில் தங்கப் பதக்கமும், மாணவர்கள் எஸ்.அக்சன் மற்றும் ஏ.சந்தோஷ் ஆகியோர் குறு இளையோர்   பிரிவில் வெள்ளிப் பதக்கமும்,  ஜி.முகமது அர்ஃபின், இளையோர்  பிரிவில் தங்கப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கடின உழைப்பும், விடா முயற்சியும், தற்காப்புக் கலை மீது கொண்ட பற்றும் இம் மாண வர்களை இந்த உயரத்தில் அமர வைத்துள்ளது.

சாதனை மாணவர்களையும், பயிற்சி அளித்தப் பள்ளியின் டேக்வாண்டோ பயிற்சியாளர் ஜெகன் மற்றும் பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர்கள் கோகுல், சவும்யா ஆகியோருக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *