உலகில் 3.4 கோடி மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை ஆய்வில் முடிவு!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

உலகளவில் நிதிச் சுமையின்றி மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு 3.4 கோடி அளவிலான மருத்துவர்கள், செவிலியர்கள், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் தேவைப்படுவதாக, தி லான்செட் பப்ளிக் ஹெல்த் (The Lancet Public Health) இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் மக்கள்தொகையின் அடிப்படையில், 10,000 இந்தியர்களுக்கு வெறும் 73 மருத்துவப் பணியாளர்கள் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 10,000 பேருக்கு வெறும் 10.5 மருத்துவர்கள் மற்றும் 10.8 செவிலியர்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் அதிக மருத்துவப் பணியாளர்களின் தேவையுள்ளதாகவும், கூடுதலாக 26 லட்சம் மருத்துவர்கள் மற்றும் 1 கோடி செவிலியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், 1990 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், உலகளவில் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து மும்மடங்கு அதிகரித்து 12 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில், பெண்கள் சுமார் 71.4 சதவிகிதம் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *