மதிய உணவில் சலவைத் தூள் பீகாரில் 36 மாணவிகள் பாதிப்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பாட்னா, ஆக.20-   பீகார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 18.8.2026 அன்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய மதிய உணவில், உப்புக்குப் பதில் சமையல்காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்துவிட்டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்பிட்ட 36 மாணவிகளுக்குத் தலைசுற்றலும், வாந்தியும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பீகார் ஷரீப் சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவில் உப்பு இல்லை என்று மாணவிகள் புகாரளித்த நிலையில், ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த உப்பு, சலவைத் தூள் டப்பாக்களால் குழப்பம் ஏற்பட்டு இவ்வாறு நடந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *