கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்தான்! நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த சாவர்க்கரின் பேரன்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மும்பை, ஆக. 19- காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர தொண்டர்களாக இருந்தனர் என சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். லண்டனில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் வி.டி. சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சத்யகி சாவர்க்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

17.8.2026 அன்று நடைபெற்ற குறுக்கு விசாரணையின் போது, ராகுல் காந்தியின் வழக்குரைஞர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்யகி, தனது தாத்தாவான கோபால் கோட்சே மற்றும் நாதுராம் கோட்சே ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையில் தீவிர தொண்டர்களாக செயல்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக மகாராட்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில்,

‘‘காந்தியார் படுகொலைக்குப் பிறகு கோட்சேவுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. தற்போது சாவர்க்கரின் பேரன் கூறியுள்ள தகவலால், மக்களிடம் ஆர்.எஸ்.எஸ். பொய் கூறியதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அந்த அமைப்பு உடனடியாக பதிலளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *