பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் ரூ.அய்ந்து லட்சம் அபராதம் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒஸ்லோ, ஆக. 18- அய்ரோப்பிய நாடான நார்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணிகள் கப்பல் சென்றது. அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை பார்க்க விரும்பியதையடுத்து, கப்பல் உரிமையாளர் ஒருவர் மூடுபனியின் போது, எச்சரிக்கைக்காக ஒலிக்க செய்யும் கப்பலின் ‘பாக் ஹாரனை’ ஒலிக்கச் செய்தார்.

இச்சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கரடி அங்கிருந்து பயந்து ஓடியது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஸ்வால் பார்ட் ஆளுநரான லார்ஸ் பவுஸ், பனிக்கரடிக்கு தொந்தரவு கொடுத்த கப்பல் உரிமையாளருக்கு, அய்ந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தால் கப்பல் உரிமையாளர் அதிர்ச்சிய டைந்தார்.

ஸ்வால்பார்ட் பகுதியின், 1972ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டத்தின் படி, பனிக்கரடியை தேவை யற்ற முறையில் அல்லது தொந்தரவு செய்வது, துரத்துவது குற்றமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *