ப.க.மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், தஞ்சை மாவட்ட ப.க.இணைச் செயலாளர் லெட்சுமணன், தஞ்சை மாவட்ட ப.க.துணைத் தலைவர் பெரியார் கண்ணன் ஆகியோர் கழக ஏடுகளுக்கு சந்தாக்களை வழங்கினர். (தஞ்சை,16.8.2026)

கழகப் பொருளாளர் மறைந்த கா.மா.குப்புசாமி அவர்களின் நூற்றாண்டு விழா நடத்தவுள்ளதை ஒட்டி அவர்தம் குடும்பத்தினர் கா.மா.கு.பன்னீர் செல்வம், கா.மா.கு.லோகநாதன், தஞ்சை காமராஜ், கழகப் பொதுக் குழு உறுப்பினர் வ.ஸ்டாலின், வழக்குரைஞர் கோ.சீனிவாசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டனர். (தஞ்சை,16.8.2026)
