சென்னை, ஆக. 18- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2ஆவது சுற்றுக் கலந்தாய்வு முடிவில் இதுவரை 88,930 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு நேற்று (17.8.2026) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிஇ, பிடெக் படிப்புக் கான கலந்தாய் வில் சிறப்புப் பிரிவு, பொதுப்பிரிவில் முதல்சுற்று, 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் மொத்தம் 88,930 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3ஆவது சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் தரவரிசைப் பட்டியலில் 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர் களும், அரசு பள்ளி மாணவர்களில் தரவரிசை 135.50 முதல் 77.50 வரையில் கட் ஆஃப் பெற்ற மாணவர்கள் என ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 719 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை 19ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதி பொறி யியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்யாத மாணவர்களும், துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் துணை கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
