அரசுப் பதவியில் இல்லாதவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதா? முதலமைச்சர் ஜோசப் விஜய் ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டார் தி.மு.க. எம்.பி. வில்சன் குற்றச்சாட்டு!

1 Min Read

சென்னை, ஜூன் 29- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) பி.வில்சன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத் துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அரசுப் பதவியில் இல்லாதவர்கள்

“முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங் கள், ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் இதர உயர்மட்ட அரசு ஆலோசனைகளில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்பது குறித்து தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் இருவரும் முதலமைச்சரின் நெருங்கிய உதவியாளர்களும், நண்பர்களும் ஆவர்.”

எந்த அடிப்படையில்…

இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அரசு ஊழியர் கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் எந்த தகுதியின் அடிப் படையில் கலந்து கொள் கிறார்கள்?

ரகசிய காப்புப் பிரமாணம்

முதலமைச்சர் பதவியேற்கும்போது ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார். அப்படியிருக்க, அரசுப் பதவியில் இல்லாத இத்தகைய நபர்களை உயர்மட்டக் கூட்டங்களில் ஈடுபடுத்துவது அரசியல மைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள் மற்றும் அவரது ரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது.

எனவே, இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வ பதவிகள் என்ன என் பதை முதலமைச்சர் விஜய் பகிரங்கப்படுத்த வேண்டும்.

அதோடு, எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொண்டு, அரசு அதிகாரி களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொதுமக்க ளுக்கு அவர் விளக்க வேண்டும் என எம்.பி. வில்சன் வலியுறுத்தியுள் ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *