தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படம் ஏந்தி பேரணி – ஆசிரியர் பிறந்த நாள் விழா விடுதலை சந்தா திரட்டுதல் ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

சிறப்பு புத்தக சலுகைகள்

ஆவடி, ஆக. 17- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, மதுரவாயல் பெரியார் பிஞ்சு தமிழவள் ஆகியோர் கடவுள் மறுப்புக் கூற மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களான தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் மாவட்ட கழகம் சார்பாக பெரியார் பட ஊர்வலமும் டிசம்பர் 2 ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பாக அதிக அளவில் விடுதலை சந்தா திரட்டுவது என்றும் அதற்காக மாவட்ட கழகத் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டுகோள் வைத்தார்.

சென்னையில் அறிவர் அம்பேத்கர் சிந்தனை களம் என்ற அமைப்பின் சிறப்பு கால்பந்து பயிற்சியாளருக்கான விருது கும்மிடிப்பூண்டி மாவட்ட கழக தலைவர் புழல் த.ஆனந்தனுக்கு அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் அழைப் பிதழில் தந்தை பெரியார் படம் இடம்பெறாத காரணத்தால் அந்த விருதினை ஏற்க மறுத்த புழல் த.ஆனந்தன் ஆவடி மாவட்ட கழகம் பாராட்டியது.

மாவட்ட கழகத் தலைவரின் நோக்கவுரையை தொடர்ந்து ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன், திருமுல் லைவாயல் நகர கழகத் தலைவர் இரணியன், பட்டாபிராம் நகர கழகத் தலைவர் இரா.வேல்முருகன், பூவிருந்தவல்லி நகர கழகச் செயலாளர் தி.மணி மாறன், ஆவடி நடராஜன், மதுரவாயல் பகுதி கழக மாணவர் கழக ஆதிதமிழச்சி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.கார்த்திக்கேயன், இனியன், நன்னன், கொரட்டூர் பகுதி கழக மகளிரணி புஷ்பா, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறைச் செயலாளர் அன்புச்செல்வி, திருநின்றவூர் நகர கழக இளைஞரணி அமைப்பாளர் ம.சிலம்பரசன், ஆவடி நகர கழக மாணவர் கழகத் தோழர் கவின், மாவட்ட கழக துணைத்தலைவர் மு.ரகுபதி ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பூவிருந்தவல்லி நகர கழகத் தலைவர் பெரியார் மாணாக்கன், மதுரவாயல் பிரகாஷ், முகப்பேர் முரளி, கலையரசன், ஆவடி ரவிச் சந்திரன், விஜயன், மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப் பாளர் பன்னீர்செல்வம், தருண் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட கழக துணைச்செயலாளர் க.தமிழ்ச் செல்வன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *