வல்லம், ஆக. 17- நேற்று (16.08.2026) காலை 10.00 முதல் மாலை 05.00 மணி வரை (ஒரு நாள்) பயிற்சிப் பட்டறை தஞ்சை வல்லம் பெரியார் நகர் பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி பணித் தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சிப் பட்டறை உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வழக்குரை ஞர் சி.அமர்சிங் தலைமை வகித்து உரையாற்றினார். கல்லூரி முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் அறிவியல் மனப்பான்மையும் என்ற தலைப்பில் முதல் வகுப்பெடுத்தார்.
பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழக இணைத் துணைவேந்தர் முனைவர் இரா.மல்லிகா, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர் உ.பர்வீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நிகழ்வினை ஒருங்கிணைத்து நெறிப் படுத்தினார்.
சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும். சுயமரியாதை இயக்க தத்துவமும் வரலாறும் என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும். தமிழர் தலைவரின் சாதனைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் நம். சீனிவாசனும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வமும் வகுப்பெடுத்தனர்.
ஜாதி ஒழிப்பு பெரும் பணி என்ற தலைப்பில் பேராசிரியர் ந.எழிலரசன் வகுப்பெடுத்தார்.
பயிற்சியாளர்கள் கேட்ட கேள்விக்கு- தமிழர் தலைவர் பதிலளித்தார்.
சிறப்பாகக் குறிப்பெடுத்தவர்கள்:
பேராசிரியர் க.ரோஜா, (முதல் பரிசு)
எஸ்.சுந்தரவள்ளி, (இரண்டாம் பரிசு)
ஜி.செங்கொடி, (மூன்றாம் பரிசு)
என்.உஷா,(நான்காம் பரிசு)
பேராசிரியர் ஜி.கிரிதரபிரசாத் (அய்ந்தாம் பரிசு) ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, புத்தகங்களைப் பரிசாக வழங்கி பாராட்டி உரையாற்றினார்.
நிகழ்வில் தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், குடந்தை மாவட்டக் காப்பாளர் வை.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், பகுத்தறிவு ஊடகப் பிரிவு மாநில செயலாளர் மா.அழகிரிசாமி, மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரக்குமார்,
மாவட்ட மகளிர் அணித் தலைவர் அ.கலைச்செல்வி, புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என்.குணசேகரன், மாநகர துணைத் தலைவர் கரந்தை அ. டேவிட், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வம், திருவையாறு ஒன்றியத் தலைவர் ச.கண்ணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.இலக்குவணன், அ.குழந்தைசாமி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், திருவையாறு பெரியார்அலி, ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி துணை முதல்வர் முனைவர் க.ரோஜா நன்றி கூறினார்.
