

சிங்கப்பூரின் 61ஆவது தேசிய நாளை முன்னிட்டு (16.8.2026) நேற்று காலை சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் பெரியார் நடை (Periyar Walk) மற்றும் தேசிய நாள் பற்றுறுதி எடுத்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மெர்லியன் பூங்காவில் காலை 7:30 மணிக்கு தொடங்கிய இந்த நடை, சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பூங்காவைச் சுற்றி, மெர்லியன் சிலை அருகே நிறைவுற்றது.
மன்றத்தின் மதியுரைஞர் வீ. கலைச் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மன்றத்தின் தலைவர் க. பூபாலன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) துணைத் தலைவர் திரு.
வீ. அன்புராஜ், சுதா அன்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, சிங்கப்பூரின் தேசிய நாள் பற்றுறுதியை எடுத்துக்கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். அவர்களுக்கு வீ. கலைச்செல்வம் நினைவுப் பரிசுப் பை (goodie bag) வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் Periyar Walk பற்றிய விதி முறைகளை எடுத்துக் கூறி நிகழ்வை வழி நடத்தினார்.
நிறைவாக, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கவிதாமாறன் மற்றும் மாணவர்கள் தமிழில் தேசிய நாள் பற்றுறுதியை கூறினர். கலந்து கொண்ட அனைவரும் தேசிய நாள் பற்றுறுதி எடுத்துக்கொண்டு ஒன்றுபட்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்கள்.
மன்ற உறுப்பினர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவருக்கும் நினைவுப் பரிசுப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை மன்றத்தின் பொறுப் பாளர்கள் மாறன், மனோ, தமிழ்ச்செல்வி, வள்ளியப்பன், பழனி, இராஜராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) துணைத் தலைவர் வீ. அன்புராஜ் பெரியார் நடை (Periyar Walk) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்துமாறு ஊக்குவித்தார்.
மன்றத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
