பாலூர், ஆக. 16- கன்னியாகுமரி மாவட்டம் கிளியூர் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பாலூர் தெ.சாம்ராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சி 15.8.2026 அன்று காலை 11.30 மணிக்கு கருங்கல் அருகே உள்ள பாலூரில் அவரது இல்லத்தில் கழக மாவட்ட தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் கிள்ளியூர் ஒன்றியச் செயலாளர் டாக்டர் பி.கலைச் செல்வன், கழக மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்சு ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் பெருந்தொண்டர் தெ. சாம்ராஜின் நினைவுகளை, கழக செயல்பாடுகளை நினைவு கூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினர் நிகழ்வில் பெரியார் பெருந்தொண்டரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
