நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம்

1 Min Read

அன்னை மணியம்மையார் அரங்கில் 11.7.2026 அன்று பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவர் அணி இணைந்து நடத்திய நோய் நாடி நோய் முதல் நாடி என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் வி.கே.ஆர். பெரியார் செல்வியின் இணைப்புரையுடன் நடைபெற்றது. ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்ட ப.க.) வரவேற்புரையாற்றினார். துவக்கவுரையை மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார், இதற்கு முன் நடந்த மருத்துவ முகாமில் நடந்த பணியை விளக்கி, அதனால் பயனடைந்தவர்களைப் பற்றி விரிவாக விளக்கினார். தலைமையுரை ஆற்றிய இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், ப.க.) இந்த கூட்டத்தின் அவசியத்தை பற்றி பேசினார். சிறப்புரையை இதய அறுவை சிகிச்சை வல்லுநர் மருத்துவர் நெ.பரத்குரு சிறப்பான வகையில் பட விளக்கங்களுடன் எப்படி இருந்தால் நலமாக இருக்கலாம் என்று விளக்கினார். கு.ஆசைத்தம்பி (மாவட்ட தலைவர்) நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பார்வையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *