கொடியேற்றும் அணிவகுப்பு மரியாதையில் அரசின் இரட்டை எஞ்சின் வாகனம் பழுது!

சிறப்பு புத்தக சலுகைகள்

மதுரா, ஆக. 16- உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நாட்டின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் சுதந்திர நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உத்தரப் பிரதேச மாநில அமைச்சர், கொடியை ஏற்றி வைத்து மரியாதையைச் செலுத்தினார்.

தொடர்ந்து, பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதற்காக, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அமைச்சர் ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாகனம் பழுதாகி பாதியிலேயே நின்றது.

வேறொரு வாகனத்தை உடனடியாக ஏற்பாடு செய்ய நேரமின்மை காரணமாக, சற்றும் தாமதிக்காமல் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பின்புறமாகத் தள்ளத் தொடங்கினர்.

அதிகாரிகள் காரைத் தள்ளிக்கொண்டே செல்ல, அதில் நின்றபடி அமைச்சர் பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

காவல்துறை உயரதி காரிகள் வாகனத்தைத் தள்ளியவாறு செல்ல, அமைச்சர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட இச்சம்பவத்தின் ஒளிப்படம் மற்றும் காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி நகைப்புக் குள்ளாக்கிவருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *