30 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய மோசடி: நீதிபதியின் கையெழுத்தைப் போலி செய்து ரூ.38 லட்சம் சுருட்டிய பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

கள்ளக்குறிச்சி, ஆக.15 ‘‘தவறு செய்தால் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’’ என்பதை நிரூபிக்கும் வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதியின் கையெழுத்தைப்போட்டு ரூ.38 லட்சம் விபத்துக் காப்பீட்டுத் தொகையை மோசடி செய்த நீதிமன்ற பெண் ஊழியர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குக் கடுமையான சிறை தண்டனை விதித்து கள்ளக் குறிச்சி நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி துணை நீதி மன்றத்தில் நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில், இழப்பீட்டுத் தொகையாக ரூ.10,565 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அங்கே இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த திண்டிவனத்தைச் சேர்ந்த அறிவுச்செல்வி (58) என்பவர், அந்த உத்தரவு நகலைத் திருத்தி, நீதிபதியின் போலியான கையெழுத்தைப் போட்டு, தொகையை ரூ.4,78,000 என அதிகப்படுத்தித் தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதே பாணியில் மொத்தம் 6 விபத்து வழக்குகளின் நீதிமன்ற உத்தரவுகளைத் திருத்தி, ரூ.38,79,982 இழப்பீட்டுத் தொகையைச் சட்டவிரோதமாகச் சுருட்டியுள்ளார். இந்தத் தொகையைத் தனது பெயரிலும், தனது மகன் வரதராஜன் (35) மற்றும் உறவினர் ஜெயங்கொண்டம் தமிழரசன் (47) ஆகியோரின் பெயர்களிலும் மாற்றியது விசாரணையில் அம்பல மானது.

இந்த விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி தொடர்பாக விழுப்புரம் சிபிசிஅய்டி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2024 ஆம் ஆண்டு முதல் தீவிரமடைந்த இந்த வழக்கு விசாரணையில், 44 சாட்சிகள் விசா ரணை செய்யப்பட்டனர் (இதில் 3 மாவட்ட நீதிபதிகளும் அடங்குவர்). அரசு தரப்பில் 103 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 நாள்கள் வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்றது.

வழக்கின் அனைத்து விசார ணைகளும் நிறைவடைந்த நிலையில், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டு அவர்களுக்கான தண்டனை விவரங்கள் அறி விக்கப்பட்டன: முதன்மை குற்ற வாளி அறிவுச்செல்வி (58): 9 பிரிவுகளின் கீழ் 37 ஆண்டுகள் சிறை தண்டனை. மகன் வரதராஜன் (35) மற்றும் உறவினர் தமிழரசன் (47): மோசடிக்கு உடந்தையாக இருந்ததற்காக தலா 8 பிரிவுகளின் கீழ் 22 ஆண்டுகள் சிறை தண்டனை.

30 ஆண்டுகளுக்கு முன்பு அரங்கேறிய இந்த மாபெரும் நிதி மோசடியில், அரசு ஊழியரே முதன்மை குற்றவாளியாக இருந்து தண்டனை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *