சென்னை, ஆக. 15- அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் 362 மாண வா்கள் கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாகவும், அந்த மாணவா்கள் புதிய விசா நடைமுறைகளால் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தார்.
சென்னை தலை மைச் செயலகத்தில் செய்தி யாளா்களிடம் அவா் கூறியதாவது:
நிகழ் கல்வியாண்டில் அண்ணல் அம்பேத்கா் அயலக உயா்கல்வித் திட்டத்தின் கீழ் முன் னெப்போதும் இல்லாத வகையில் 362 மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாளிகளுக்கு பிரிட்டன் அரசின் புதிய விசா நடைமுறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாணவா்களின் கல்வி வாய்ப்பு பாதிக்காத வகையில் சம்பந்தப்பட்ட பிரிட்டன் அரசு விசா அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு பிரச்சினைக்குத் தீா்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆதிதிராவிடா் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 350 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும். அங்கு மாணவா்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து தொடா் ஆய்வு நடத்தப்படும்.
நிதிநிலை அறிக்கையில் சமூக நீதித் துறைக்கு ரூ.3,900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்காக ஒன்றிய அரசு அளிக்கும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படும்.
ஆணவப் படுகொலை தொடா்பான நீதிபதி கே.என்.பாஷா குழு அறிக்கை அளித்த பின்பு, அதற்கு எதிரான சட்டம் கொண்டுவருவது குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு எடுப்பார் என்றார் அமைச்சா் வன்னி அரசு.
இந்தச் சந்திப்பின் போது , அந்தத் துறைச் செயலா் சுப்பையன் உடனிருந்தார்.
