திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47ஆம் ஆண்டு விளையாட்டு விழா தொழிலாளர் துறை உதவி ஆணையர் பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக. 15- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47 ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள மணியம்மையார் விளையாட்டு அரங்கத்தில் 14.08.2026 அன்று காலை 8 மணி அளவில் மொழி வாழ்த்துடன் நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கே.பி.இந்தியா சிறப்பு விருந்தின ராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர், மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்குநர் டி.கிருஷ்ணகுமாரும், பள்ளி முதல்வர் முனைவர்.க.வனிதாவும் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் எக்ஸ்.ஆல்வின் ஜெரோன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை வரவேற்றார்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தொடர்ந்து பள்ளியின் மாணவர் தலைவி எஸ்.யுவேரா, மற்றும் மாணவத் துணைத் தலைவர் எஸ்.எம். முகமது ஹாரிஸ் அப்பாஸ் ஆகியோரின் தலைமையில் பள்ளியின் அனைத்துக் குழுக்கள் மற்றும் மாணவ இயக்கங்களின் கம்பீரமான அணிவகுப்பு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. அணி வகுப்பிற்குப் பின்பு மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை எஸ்.சவுமியா பள்ளியின் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான விளையாட்டு அறிக்கையை மாணவர்களின் வெற்றிப் பட்டியலாக வாசித்தளித்தார். தொடர்ந்து பள்ளியின் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ,மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் உடற் பயிற்சிகளும், குழுப் பயிற்சிகளும், தேசிய மாணவர் படையினரின் வீர சாகச அணிவகுப்பு நிகழ்வு, யோகா, சிலம்பம், டேக்வாண்டோ போன்ற சாகசப் பயிற்சிகளும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

தடகளப் போட்டிகள்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் கபடி, கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் பல்வேறு தடகளப் போட்டிகளைச் சிலையாக நின்று உணர்த்தியதும், யோகா,சிலம்பம், டேக்வாண்டோ மற்றும் பிரமிட் பயிற்சிகளைக் கண்ட பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். தொடர்ந்து, விளை யாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டி களில் பங்கேற்று வெற்றி பெற்றவர் களுக்குப் பரிசுகளும், பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்,  கே.பி.இந்தியா  விளையாட்டின் முக்கியத்துவத்தையும், மாண வர்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளையும் பற்றிய அறிவுரைகளைத் தன் உரையின் மூலம் மாணவர்களுக்கு வழங்கிய தோடு, வாழ்வில் உயர்வதற்கு கல்வி ஒன்று மட்டுமே உறுதுணையாக இருக்கும், அத்தகையக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உங்களை நம்பிக் கொண்டிருக்கும் பெற்றோர்களை மதித்து நடந்து அவர்களைப் பெருமைப் படுத்துங்கள் என்றும், குழந்தைத் தொழிலாளர்கள் எங்கேயாவது பணியில் அமர்த்தப்பட்டிருப்பதைக் கண்டால் 1098 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து  வாழ்வில் கல்வி என்னும் சுடரை ஏற்றுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், நமக்கு அனைத்தையும் வழங்கும் இயற்கைக்கு நம்மால் இயன்றதை நன்றியாகத் திருப்பி செலுத்த வேண்டுமானால், அவற்றிற்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பரிசுகள் வழங்கல்

தொடர்ந்து, ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடி முதலிடம் பிடித்த பச்சை நிற அணியினருக்கும், இரண்டாம் இடம் பிடித்த நீல நிற அணியி னருக்கும் சுழற் கோப்பைகள் வழங் கப்பட்டன. நிகழ்வின், நிறைவாகப் பள்ளியின் மாணவர் தலைவி எஸ்.யுவேரா  நன்றியுரை வழங்க, விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சியில் பெரியார் தொடக்கப் பள்ளியின் தாளாளர் ஆரோக்கியராஜ், தலைமை யாசிரியை விஜயலெட்சுமி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பாக்கியலெட்சுமி, பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 47ஆம் ஆண்டு விளையாட்டு விழா ஒருங்கிணைப்பாளரும், முதுகலை தமிழாசிரியருமான, .கு.தேவிலெட்சுமி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக பணித் தோழர்கள் உள்ளிட்ட அனை வரும் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற் றோர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *