பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா – சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு

1 Min Read

திருச்சி, மார்ச் 17- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை (28.2.2026) முன்னிட்டு மாணவர்களின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.

27.2.2026 அன்று நடைபெற்ற இப்போட்டிகளில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் ஈடு பாட்டுடனும் பங்கேற்றுத் தங்களது அறிவியல் புலமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன.

வெற்றி வாகை சூடிய மாணவர்கள்:

நடுவர்களின் சீரிய மதிப்பீட் டின் அடிப்படையில், பல்வேறு நிலை களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

பேச்சுப் போட்டி

முதலிடம்: எஸ். முகுல், இரண்டாமிடம்: ஆர். ராஜசிறீ, மூன்றாமிடம்: பி. சண்முகவேல்

 கட்டுரைப் போட்டி

முதலிடம்: எஸ். நீரஜா (எட்டாம் வகுப்பு), இரண்டாமிடம்: எஸ். பி. கவுதிக் யூபன் (ஆறாம் வகுப்பு), மூன்றாமிடம்: எஸ்.நித்யசிறீ (ஏழாம் வகுப்பு)

பரிசளிப்பு மற்றும் பாராட்டு:

வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பள்ளியின் முதல்வர் முனைவர் க. வனிதா பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ் களையும் வழங்கிச் சிறப்பித்தார். அப்போது அவர் ஆற்றிய உரை யில், “மாணவர்கள் வெறும் புத்தக அறிவோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் அறிவியலின் நுட்பங்களை உணர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்” என்று ஊக்கப்படுத்தினார்.

சிறப்பான ஒருங்கிணைப்பு:

இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர், பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர், கி.ஜெயகாந்தன் மிக நேர்த்தியாகச் செய்திருந்தார். அவரை பள்ளி நிர்வாகமும் முதல்வரும் வெகுவாகப் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *