புதுடில்லி, ஆக.14 நாடாளுமன்றத்தின் கடைசி நாளில் ‘வந்தே மாதரம்’ பாடத்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் கடைசி நாளான நேற்று (13.8.2026) காலை மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் வருகை தந்தனர். ஆனால், கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் கூட்டத்தொடரை முடிப்பதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசுகையில் பிரியங்கா காந்தி தெரிவித்திருப்பதாவது:
“வந்தே மாதரம் பாட மட்டுமே உள்துறை அமைச்சர் வந்தார். முழு கூட்டத்தொடரும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் என யாருமே இதில் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்கையில், இந்த ஜனநாயகமும் நாடாளுமன்றமும் எவ்வாறு செயல்பட முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
