இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 10,000-க்கு மேல் மக்கள் பலி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அய்.நா. கண்டனம்

அரசியல்

காசா, நவ.3 பாலஸ் தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப் பினர் கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப் பாவி பொதுமக்கள் என 1,400-க்கும் அதிகமா னோர் கொல்லப்பட்ட னர். அதோடு பெண்கள், சிறுவர்கள் உள்பட 200-க்கும் அதிகமானோரை ஹமாஸ் அமைப்பினர் சிறை பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென் றனர். இதற்கு பதிலடி தரும் விதமாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 28ஆ-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் வான் மற்றும் கடல் வழியாக காசா மீது குண்டுகளை வீசி தாக்கி வந்த இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாள்களாக தரைவழியாக காசா வுக்குள் நுழைந்து தாக்கு தல் நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் உக்கிர மடைந்து வரும் போரால் காசா நகரம் சிதைந்து வருகிறது. 

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 5-ஆவது முறை யாக ஏற்பட்டுள்ள இந்த போர் முந்தைய 4 போர் களை விடவும் கொடூரமா னதாகவும், மோசமானதாக வும் மாறி வருகிறது. 

இந்த நிலையில் காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத் தியது. குண்டு வீச்சில் குடியிருப்பு கட்டடங்கள் தரைமட்டமானதாகவும் பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் உயிரிழந்த தாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாக வும் காசா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ, அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தளபதி இப்ராஹிம் பியாரியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும், தாக்குதலில் இப் ராஹிம் பியாரி உள்பட ஹமாஸ் அமைப்பினர் 50 பேர் கொல்லப்பட்ட தாகவும் கூறியது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு ஜபாலியா அகதிகள் முகாம் மீது வான்தாக்கு தல் நடத்தப்பட்டது. தொடர் தாக்குதலில் சுமார் 400 பேர் கொல் லப்பட்டிருக் கலாம் அல் லது காயமடைந்திருக்க லாம் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித் துள்ளது.

இதனிடையே ஜபா லியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலை கண்டித்து கொலம்பியா, சிலி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலில் இருந்து தங்கள் நாட்டு தூதர் களை திரும்பப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் இஸ்ரேலில் உள்ள தனது தூதரை திரும்ப அழைத்துள்ளது. மேலும் மனிதாபிமான அடிப் படையில் போரை உட னடியாக நிறுத்த வேண் டும் என்றும் இஸ்ரேலை ஜோர்டான் தீவிரமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் 9 ஆயிரத்து 61 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3,760 குழந்தைகள், 2,326 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 32 ஆயிரம் பேர் படுகாயம் அடைந் துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள் ளது.

இந்நிலையில்  ஜபா லியா அகதிகள்முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றங்களுக்கு சமமானது என அய்.நா. மனித உரிமைகள் தலை வர் கண்டித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *