தமிழ்நாட்டைக் கண்டித்து கருநாடகாவில் நடைபெற்ற‌ முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு இல்லை

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக.14- காவிரி நதிநீர் பங்கீடு, மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டைக் கண் டித்து கருநாடகாவில் நேற்று (13.8.2026) நடந்த முழு அடைப்பு போராட் டத்துக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.

காவிரி நதி நீர் பங் கீட்டு விவகாரத்தில் தமிழ் நாட்டை கண்டித்தும், மேகதாது அணையை கட்ட வலியுறுத்தியும் கன்னட கூட்டமைப்பின் சார்பில், நேற்று கருநாடகா வில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்தார். இதற்கு கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டாம் என வலியுறுத்தினார்.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று கருநாடக தனியார் பள்ளி, கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் பேருந்து மற்றும் வாடகை கார் ஓட்டுநர் சங்கங்கள், உணவக உரிமை யாளர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் உள்ளி ட்டவை தங்களது ஆதரவை திரும்பப் பெற்றன. இத னால், மாநிலம் முழு வதும் நேற்று பள்ளிகள், கல் லூரிகள், கடைகள், உண வக‌ங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், திரை யரங்கங்கள், ஆட்டோ, வாடகை கார்கள் வழக்கம் போல இயங்கின.

அதேவேளையில் பெங்களூருவில் சுதந்திரப் பூங்கா, டவுன்ஹால், தமிழ் நாடு எல்லையான அத்திப் பள்ளி, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் போரட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

பெங்களூருவில் நேற்று கன்னட கூட்ட மைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், போராட்டத்துக்கு புறப் படுவதற்கு முன்பாக காவல் துறையினர் அவரை வீட்டிலேயே கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாட்டாள் நாகராஜ், காவல்துறை யினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் குண்டுகட்டாக அவரை தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

தமிழ்நாடு எல்லையில் அரசு பேருந்துகளை தடுக்க முயன்ற கன்னட அமைப்பினரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்காததால், தமிழ் நாடு அரசு பேருந்துகள் வழக்கம் போல பெங் களூரு, மைசூரு, கோலார் தங்கவயல் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன.

கருநாடக முதலமைச் சர் டி.கே.சிவகுமாரை நேற்று 10-க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் சந்தித்து பேசினர். அப் போது முழு அடைப்புப் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக கூறினர்.

10 ஆயிரம் கன
அடி நீர் திறப்பு

கடந்த 11.8.2026 அன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட் டுக்கு அடுத்த 15 நாட் களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை கருநாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கருநாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவ தாக தெரிவித்தது.இந் நிலையில், கருநாடக அரசு 10 ஆயிரம் கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *