சென்னை, ஆக. 14- அரசுக் கல்லூரிகளில் பணி யாற்றி சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ‘டேப்ஸ்’ திட்ட இடைக் கால மாதாந்திர நிவார ணத் தொகை பெற விண் ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணை யரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்லூரி கல்வி ஆணையர் பா.பொன்னையா அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள மற்றும் அரசு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
கடந்த 1.4.2003 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ அரசுப் பணியில் சேர்ந்து 1.1.2026 அன்று அல்லது அதற்கு பின்னர் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (டேப்ஸ்) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
டேப்ஸ் திட்டத்துக் கான விதிகளை உரு வாக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளதால், 1.1.2026 அன்று அல்லது அதற்கு பின்னர் பணி யிலிருந்து ஓய்வு பெற்ற அல்லது இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் பங்களிப்பு ஓய் வூதிய திட்டம் (சிபிஎஸ்) அல்லது டேப்ஸ் – இரண்டில் ஒன்றை தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டேப்ஸ் திட்டத்தின் கீழ் இடைக்கால மாதாந்திர தொகை பெற விரும்பினால் அரசா ணையில் வெளியிட்டுள்ள அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிநிறைவு செய்திருக்க வேண்டியது அவசியம். இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசு தாரர்களும் இடைக்கால நிவாரணம் பெற அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
சிபிஎஸ் திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை பெற விரும்புவோர் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து உரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இறந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுதாரர்களுக்கும் இது பொருந்தும். சிபிஎஸ் கணக்கில் உள்ள ழுழு தொகையையும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஓய்வூதியதாரர், வாரிசுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
டேப்ஸ் திட்டத் துக்கு விருப்பம் தெரி வித்தவர்களுக்கு இடைக் கால நிவாரணம் அய்எப்எச்ஆர்எம்எஸ் (IFHRMS) தளம் வழியாக தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், டேப்ஸ் இடைக்கால நிவாரணம் பெறுவோர் அத்திட்டத்தின் இறுதி செயல்பாட்டு நடை முறைகள் வகுக்கப்பட்டு, செயல் வடிவம் பெறும் போது தங்கள் விருப்பத்தை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
