கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அழைப்பிற்கிணங்க பள்ளிக்குச் செல்வதற்குச் சாலை வேண்டும்! ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

சிறப்பு புத்தக சலுகைகள்

லக்னோ, ஆக.13 உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி செய்துதரக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட காட்சிப் பதிவு இணை யத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திர நாளான ஆக. 15 முதல் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்துள்ளது.

கிராமப்புறங்களில், மலைப்பிர தேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், முறையான மதிய உணவு, விளையாட்டுத் திடல், சாலை வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த பிரச்சா ரத்தை சிஜேபி தொடங்கியுள்ளது.

இதற்காக ஆதரவாளர்கள், பெற் றோர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து காட்சிப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சாலை வசதி கோரி உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் காட்சிப்பதிவை வெளியிட்டிருந்தனர். இதனை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதேபோன்று மகாராட்டிரத்தின் இரு மாணவிகள், தாங்கள் பள்ளிக்குச் செல்ல சரியான சாலை இல்லை எனக் கூறி காட்சிப் பதிவை வெளியிட்டிருந்தனர். இந்தக் காட்சிப் பதிவு பகிரப்பட்ட மறுநாளே, அந்த கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு காட்சிப் பதிவுகளையும் சேர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பகிர்ந்துள்ளது.

மாணவர்களுக்குத் தேவையான கல்வி அடிப்படை உரிமை என்றும் அது அரசு கொடுக்கும் சலுகை அல்ல; இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை கேட்டுப்பெறுவது பாராட்டுக்குரியது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு சாலை வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல் துறை யினர் தடுத்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிப் பதிவையும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பகிர்ந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *