பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தொடர்பான போட்டிகள் அறிவிக்கப்படுகிறது.
- 2026 செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று போட்டிகள் எல்லா கழக மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
- மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பேசி திட்டமிட வேண்டும்.
- போட்டி அரங்கத்தில் குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
- போட்டிக்கான விவரம் மாணவர்களுக்கு விரைவில் சென்றடைய வேண்டும்.
- போட்டி விவரத்தை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
- மாணவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் பெற்றோருடனோ அல்லது பாதுகாவலருடனோ வரவேண்டும்.
- போட்டியில் பங்கு பெற கட்டணமும் இல்லை.
- பங்கேற்பவர்கள் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்,
- நடுவர்களை முன்னரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
- போட்டியில் பங்கேற்பவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
- பரிசுகளை மாவட்டப் பொறுப்பாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
- சான்றிதழ்கள், நூல்கள் வாங்கிட வேண்டும்.
- நூல்கள் குறைந்த விலையில் இருந்தால் போதும். புத்தக விவரங்களை பெரியார் திடல் நூல் விற்பனை நிலையத்தில் பெறலாம்.
- போட்டி விவரங்களை ஒத்த கருத்துடையவர்களுக்கு பகிரலாம். அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- பரிசுத் தொகையை நன்கொடையாக பெற வேண்டும். எல்லோருடைய பங்களிப்பும் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
- திராவிடர் கழகத் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
போட்டி வகுப்பு தலைப்பு
பேச்சுப் 6 முதல் 9 வரை 1. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்
போட்டி 2. பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்
- பெரியார் என்னும் உலகத்தலைவர்
10 முதல் 12 வரை 1. சுயமரியாதை இயக்கத்தின் ‘அனைவருக்கும் அனைத்தும்’
- தமிழுக்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு
- என்றும் தேவை பெரியார்.
கல்லூரி அளவில் 1. நூறாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு.
- அறிவியல் மனப்பான்மையும், மூடநம்பிக்கையும்
- தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி
ஓவியப் 6 முதல் 9 வரை 1. தந்தை பெரியார் [மார்பளவு படம்]
போட்டி 2. பெரியாரும் பெண் விடுதலையும்
- பெரியாரும் வைக்கம் போராட்டமும்
10 முதல் 12 வரை 1. தந்தை பெரியார் கண்ட ‘இனி வரும் உலகம்’
- தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்
- அறியாமை, மூடநம்பிக்கைகளின் கடும் எதிரி தந்தை பெரியார்
மேலும் தொடர்புக்கு:
இரா. தமிழ்ச்செல்வன் தலைவர் 96770 11415 வி.மோகன் பொதுச்செயலாளர் 91598 57108
பகுத்தறிவாளர் கழகம்
