உள்நாட்டுப் போரால் இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதி!

சிறப்பு புத்தக சலுகைகள்

ராமேசுவரம், ஆக. 13- உள்நாட்டுப் போரின்போது அகதிகளாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் தாயகம் திரும்புவதற்கு குடிவரவு ஒப்புதல் அளிக்க இலங்கை நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களவர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர்.

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் உயர் ஆணையம் (UNHCR) தமிழ்நாடு மற்றும் இந்திய அரசின் மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் 58 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமுக்கு வெளியே உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்து இலங்கை தமிழர்கள் 34 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். மேலும் ஒடிசாவின் மால்கன்கிரியில் உள்ள முகாமில் 60 பேர் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கையின் ஊடகத் துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

இந்தியாவில் முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதிகளுக்கான அய்க்கிய நாடுகள் உயர் ஆணையம் மூலமாகவும், சுயமாகவும் தாயகத்துக்கு (இலங்கைக்கு) திரும்ப விரும்புகிறார்கள். அவர்கள் இலங்கைக்கு மீண்டும் வருவதற்கு தேவையான குடிவரவு அனுமதிக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இலங்கைக்கு வர விரும்புவோர் 2006 ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் தம்மை இலங்கையர் எனும் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அவர்கள் மீது கொலை, அரசுக்கு எதிராக துரோகம், குற்றங்களை மேற்கொள்ளாத ஆள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு தற்காலிக வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்கி இலங்கைக்கு வருகை தருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *