பிராசவில்லி, ஆக.12– காங்கோ குடியரசில் அதிவேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000அய் கடந்துள்ளது.
அந்நாட்டு அரசு வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 4,381 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,011 போ் உயிரிழந்தனா்.
கடந்த மே 15-இல் அறிவிக்கப்பட்ட இந்த நோய்த்தொற்றில் பரவும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், கிளா்ச்சியாளா்களின் மோதல், ஊதியப் பிரச்னையால் சுகாதாரப் பணியாளா்கள் மேற்கொண்டுள்ள பணிநிறுத்தம் ஆகிய காரணங்களால், தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவ உதவிகள் சென்றடைவதில் கடும் சிக்கல் நிலவுகிறது.
