ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்த அதிபர் டிரம்ப்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

நியூயார்க், ஆக. 12– ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உணவு ஏற்றிச் செல்லும் லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 7, 8 தேதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. துருக்கியில் இருந்து பிரிட்டனுக்கு சென்றபோது கத்தார் வழங்கிய சொகுசு விமானத்தை அதிபர் டிரம்ப் பயன்படுத்தவில்லை.

இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ஈரான் அச்சுறுத்தல் காரணமாக கத்தார் அரச குடும்பம் வழங்கிய சொகுசு ஜெட் விமானத்தை அதிபர் டிரம்ப் புறக்கணித்துள்ளார். இதேபோல பழைய ஏர்போர்ஸ் ஒன் விமானத்தையும் அவர் பயன்படுத்தவில்லை.

துருக்கி தலைநகர் அங்காராவில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் அவர் ஏறும்போது செய்தியாளர்கள் புடைசூழ்ந்து காட்சிப் பதிவு, நிழற்படம் எடுத்தனர். அவர்களுக்கு கையசைத்தவாறு அதிபர் டிரம்ப் விமானத்துக்குள் ஏறினார். அதே விமானத்தில் செய்தியாளர்களும் ஏறி தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்தனர். அவர்கள் இருந்த பகுதியின் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டன

போர்க்காலங்களில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம். ஈரான் அச்சுறுத்தல் காரணமாக கதவுகள் மூடப்படுவதாக செய்தியாளர்கள் கருதினர். ஆனால் சிறிதுநேரத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து அதிபர் டிரம்ப் கீழே இறங்கி் உணவு லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்து சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த
சி-32ஏ ராணுவ விமானத்துக்கு மாறினார்.

ஈரான் ராணுவத்தால் அதிபர் டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக யாருக்கும் தெரியாமல் மாற்று விமானத்தில் அவர் பயணம் செய்திருக்கிறார். இது செய்தியாளர்களுக்கும் தெரியாது. ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்த அதிபர் மாளிகை அதிகாரிகளுக்கும்கூட தெரியாது. மூத்த அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *