பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு; 300-அய் நெருங்கும் பாதிப்பு குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

காந்திநகர், ஆக.12 பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் ஜூன் கடைசி வாரம் முதல் ஆட்கொல்லி வைரஸான சண்டிபுரா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்பரவல் முதலில் பஞ்சமகால் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. அங்கு ஜூலை மாத தொடக்கத்தில் சண்டிபுரா தொற்று அறிகுறிகளுடன் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் சண்டிபுரா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சண்டிபுரா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவர். அதே சமயம் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-அய் நெருங்கி வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.1965ஆம் ஆண்டு மகாராட்டிர மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதித்தபோது இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தக் கிராமத்தில் அறியப்பட்டதால், இதற்கு‘சண்டிபுரா வைரஸ்’ எனப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பி டத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *