சென்னை, ஏப்.27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்தநாள் இன்று (27.4.2026).
மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர்.
பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடல். அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!
– மேற்கண்டவாறு தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

