85ஆம் ஆண்டு காணும் நமது திராவிட இயக்க லட்சியப் பயணத் தோழன் ‘முரசொலி’க்கு நமது வாழ்த்து!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தி.மு.க.வின் அதிகார பூர்வ நாளேடான நம் ‘‘முரசொலி’ நாளேடு இன்று தனது 85ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து மிகவும் பாராட்டி வாழ்த்துகிறோம்.

வெறும் துண்டுக் கையேடாக 85 ஆண்டுகளுக்கு முன் நமது  கலைஞர் பசி நோக்காது, கண் துஞ்சாது, மெய் வருத்தம் பாராது, உழைத்து இன்று அது பல நெருக்கடிகளையும் – ‘விடுதலை’, ‘தீக்கதிர்’  ஏடுகளைப் போல நெருக்கடி கால நெருப்பாற்றையும்,  சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி சாதனை சரித்திரம் படைத்துவரும் நாளேடு!

தனது எழுத்துக்காக ஒரு பத்திரிகை ஆசிரியரைச் சட்டமன்றத்திற்கு அழைத்துக் கூண்டில் ஏற்ற வைக்கப்பட்டது என்றால் (தோழர் முரசொலி செல்வம் எழுத்தாளர், ஆசிரியர் என்பதால்) அதுவே  அதன் விழுப்புண்களின் விழுமியங்களில் ஒன்று.

‘முரசொலித்ததால் விடியல் அழைப்பு’ மக்களின் அடிமைத்தனத்திலிருந்து ‘விடுதலை’ கிடைத்து அது ‘குடிஅரசாக’ப் பரிமளிக்கும் என்பதை தலைப்புகள் மூலம்  மக்களுக்கு உணர்த்திடும் மகத்தான அமைதிப் புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்று!

திராவிடர்களின் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டுப் பாதுகாப்பு பயணக் காவல் அரண்களில் ஒன்று.

நூறாண்டு காண விழையும் அதன்  தோழமை ஏடான ‘விடுதலை’யின் சார்பாகவும், தி.மு.க.வின் தாய்க் கழகத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஆசிரியர் ‘விடுதலை’

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை  

11.8.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *