சென்னை, ஆக. 11- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 8.8.2026 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் ‘‘அறிவியலும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
அவ்வை நன்னன் இணைப்புரையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆர்.சண்முகநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமைரையாற்ற, டிரான்கன் டைனமிக்ஸ் நிறுவன அதிகாரி ரோபாடிக்ஸ் மற்றும் ஏ.அய். வல்லுநர் முனைவர் கெனித்ராஜ் அன்பு “அறிவியலும் சமூகநீதியும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அரும்பாக்கம் சா.தாமோதரன் தமிழர் தலைவர் அறிக்கையை வாசித்தார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
